Pages

Tuesday, November 13, 2012

ஒரு கண்ணீரின் கதை

அவன் பிறந்தது அன்றுதான். அவன் தாய் நெடுநாள் கழித்து ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதும் அன்றுதான். அழுது கொண்டு இருந்த அந்த பிஞ்சுக்கு தெரிந்தா இருக்கும் தனக்கு அழுகைதான் நிறந்தரம் என்று. அந்தப் பச்சிளம் தாய் தன் மகனைப் பார்த்து மகிழ அருகே இருந்தது அவன் தந்தையல்ல இருபது பச்சிளம் தாய்கள், அந்த அரசு மருத்துவமனையில். தந்தை இன்னும் மகன் முகம் பார்க்கவில்லை, வேறு என்னசெய்ய ? அவனின் அன்றையக் கூலியில் தான் தாய்க்கும் சேய்க்கும் உணவும் மருந்தும்......... இரு நாளில் வீட்டுக்கு சென்றான்.வீடு கோடை வெயிலில் பற்றி எரியும் கூரை. பணக்காரர் தம் நாய்க்கு ஒதுக்கும் அளவு வீடு. தாய்க்கென முன்று சேலைகள். ஆங்காங்கே கிழியலும் தையலும். தந்தைக்கென இரு சட்டைகள். அதில் பஞ்சர்கள் அதிகம். அவள் சேலைத்தான் அவனுக்குப் போர்வை. தந்தையின் அன்றையக் கூலித்தான் நாளைய உணவு. அதுவும் இருவேளைக்கே. தண்ணீர்த்தான்அவர்களுக்குப் பால். அவனும் வளர்ந்தான். கிழிந்துவிட்டது என பணக்காரர் தூக்கி எறியும் துணித்தான் இவனுக்கு புத்தாடை எனறானது. இரு வேளை உணவு. ஒரு வேளைப் பட்டினி. சில சமயம் ஒரு வேளை உணவு. இரு வேளைப் பட்டினி. இது தான் அவன் கதி. இறுதியில் கண்ணீர் தான் நிறந்தரம். நாட்கள் கண்ணீரிலேயே கழிந்ததன. . அன்று தீபாவளி. அவனுக்கோ இரண்டரை வயது. விவரம் சற்று உண்டு. மாடமாளிகைகளில் வெடிச் சத்தம். இங்கோ அடிவயிறு பசியில் தவிக்க அவன் தாயிடம் பணக்காரர் வீட்டைக் காட்டிக் கேட்டான் " அம்மா.....ம்மா அது என்னம்மா மேல போய் கலர் கலரா சத்தம் போடுது? " . தாய் அவனைத் தழுவி அழுது கொண்டே சொன்னாள் " அது ஒன்னுமில்லத் தம்பி நம்ம ஒரு மாசசாப்பாடு"

Sunday, October 14, 2012

MY THOUGHTS

To succeed great in life, never be a Roman in Rome- VB SIVA
When the whole world left me alone and I look back, there I see my shadow standing alwayswith me- VB SIVA
What 95% of literates lack is"common sense". Actually they never make it- VB Siva
I wonder, between the two worlds of vegetarianism and non-vegetariani sm, if killing of living things matters, why plantsconsidered inferior to others?-VB SIVA
I never want to prove someone wrong. I just want to prove the right thing to someone who says wrong- VB SIVA
Being a fool is not a big mistake. But being a deaf fool isreally a great mistake- VB Siva

Monday, October 1, 2012

நீயா நானா?

இது ஐம்பது பேரைத் திரட்டிக் கொண்டு நேர் எதிர்முனைகளில் அமர வைத்து இரண்டு மணி நேரம் விவாதித்து முடிவுக்கு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியல்ல. இது இயற்கைக்கும் செயற்கைக்குமான "நீயா நானா?" போராட்டம். காலச் சக்கரத்தில் மனிதன் என்று நெருப்பைக் கண்டுப்பிடித்தானோ அன்றே தொடங்கிவிட்டது இந்தப் போராட்டம். இந்தப் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெறப்போவது என்னவோ நிச்சயம் இயற்கையாகத் தான் இருக்க முடியும். இந்த வெற்றி உறுதியாய் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இயற்கையை அழித்து செயற்கை உருவம் தந்தாலும் இயற்கையை முழுதும் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதே யதார்த்தமான உண்மை. இருப்பினும் மனிதன் செயற்கையை நோக்கி ஓடும் காரணம் தான் என்ன? தான் விரும்பும் தனக்கேற்ற சவுகரியமான வாழ்க்கையை வாழலாம் என்னும் ஆசை ஒருபுறம் இருக்க, மனிதன் இயற்கையை பெரும் அளவு வதைக்க காரணம் அவனுள் இருக்கும் மிருக குணம் தான்.
ஒரு வறண்ட காட்டில் இரு புலிகள் நான்கு மான்கள் இருந்தன. மூன்று ஆண் மான்கள். இன்னொன்று பெண் மான். அப்பெண் மான் கருவுற்று இருந்தது. அன்று மாலை வேளையில் புல் மேய்ந்து கொண்டு இருந்தன மான்கள். மிகுந்த பசியுடன் இரையைத் தேடிக் கொண்டு இருந்த புலிகள் கண்களில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் பட்டது. புலிகள் வருவதை கண்டு சுதாரித்துக் கொண்ட மான்கள் ஓட்டம் பிடித்தன. கர்ப்பத்தின் பாரம் தாங்காமல் பெண் மான் மயங்கி விழுந்தது. இதைப் பார்த்த புலிகள் "நான் முந்தி நீ முந்தி" என்று அந்த இரைத் தனக்கு தான் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தன. கடுமையான சண்டைக்குப் பிறகு ஒரு புலி மற்றொன்றைக் கொன்று பெண் மானையும் வேட்டையாடி உண்டது. இரண்டு வாரங்களில் அம்மூன்று ஆண் மான்களையும் வேட்டையாடி பசியாற்றியது. பின்னர் வேட்டையாட உணவின்றி பட்டினி கிடந்து மாண்டது.
அந்தப் புலிகள் தான் மனிதர்கள். இயற்கை தான் மான்கள். மனித செயல்களின் பிரதிபலிப்பே பெண் மான் குட்டிகளை ஈன்று எடுக்கும் வரைக் காத்திருந்து அதை கொல்லாமல் அதுவரை ஆண் மான்களை வேட்டையாடி பசியாறாத முட்டாள் புலிகளின் செயல்கள். இயற்கையின் துணையின்றி மனிதன் வாழ்ந்துவிட முடியாது . இயற்கைக்கு செயற்கை வடிவம் தரும் மனிதனால் நிச்சயமாக செயற்கைக்கு இயற்கை வடிவம் தர முடியாது. இதனை மனிதன் நன்றாகவே அறிவான். இருப்பினும் இயற்கையை மீட்க முடியாத அளவு அழித்து ஆக்கரமிப்பது ஏன்? இந்த ஆக்கரமிப்பு இன்றோ நேற்றோ தொடங்கியது அன்று மனித வரலாறு எழுத ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மனிதனால் இயற்கையின் அழிவும் கூடவே நடந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மனிதனுள் இருக்கும் மிருக குணம் தான். மானை வேட்டையாட புலிகள் "நான் முந்தி நீ முந்தி" என்று ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இன்னொரு புலியைக் கொன்று கடைசியாக மான்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் பெண் மானையும் கொன்று உணவின்றி இறந்த புலியின் குணம் தான் மனிதர்களுக்கும்.
"நான் தான் பெரியவன் என்ற ஆணவமும் பிறர் தன்னைவிட முன்னேறி விடக் கூடாது என்ற பொறமையும் எல்லாம் தனக்குதான் என்ற பேராசையும் கலந்த மிருக குணம் தானும் அழிந்து பிறவற்றையும் அழித்து இயற்கையையும் அழிக்கின்றது."
"பிறரை வீழ்த்துவதே வெற்றி என்று நினைக்கிறான். உணர்வுகளையும் பொருள்களையும் பகிர்ந்துக் கொள்ள மனம் இல்லாத முடவனாக இருக்கிறான் ".
அது காந்தியானலும் ஹிட்லரானலும் சரி. அந்த குணம் ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. "என்ன கற்றோம் என்பதை விடுத்து என்ன மதிப்பெண் பெற்றோம் என்று மாணவர்கள் அடித்துக் கொள்வதே இதற்கு சான்று". இந்த எண்ணத்தை பலர் வெளிப் படுத்துகின்றனர். சிலர் உண்மை உணர்ந்து அமைதிக் காக்கின்றனர். அவர்களே சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.
முற்காலத்தில் மொழி, இனம், நிலம், நிறம், சாதி, சமயம், நாடு என்று தன் மிருக குணத்தை வெளிப்படுத்திய மனிதன் இன்று தனிதனி அரசாங்கமாகவும் நிறுவனமாகவும் வந்து நிற்கின்றது. நாகரிகம் என்னும் போர்வைக்குள் அவனின் மிருக குணம் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. எவ்வழியானலும் சரி, யார் அழிந்தாலும் சரி தான் மட்டும் முன்னேற வேண்டும். பிறரை விட தான் தான் பெரியவனாக இருக்க வேண்டும் என்ற மிருகம் இயற்கையை பெருமளவு அழிக்கின்றது. போட்டிகள் அதிகரித்துவிட்ட இந்த காலகட்டத்தில் அக்கொடூரன் அதிகமாகவே வெளியே வருகிறான். சகமனிதனின் அழிவைப் பற்றிக் கவலைப் படாத மனிதன் இயற்கையைப் பற்றி கவலைப் படுவானா என்ன? மனிதன் தன் சுயநலத்திற்காக அழிவை மட்டுமே இயற்கைக்கு பரிசாக தந்துள்ளான். வரலாறே இதற்கு சாட்சி.
என்றேனும் ஒரு நாள் பூமி மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாறதான் போகின்றது. புவி வெப்பமயமாதல், கடல் மட்டம் உயருவது, நில மாற்றங்கள் ஆகியவை இயற்கையானவை. மனிதனின் எந்த தலையிடும் இல்லாவிட்டாலும் இது இயல்பாக நடக்கும். ஆனால் மனித செயல்கள் இயற்கையைச் சார்ந்து இல்லாமல் இருப்பதால் அவற்றின் வேகம் அதிகமாகின்றது. நிலாவிலும் செவ்வாயிலும் வாழ இடம் பார்த்தாலும் சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் இன்றி வாழ மனிதன் என்ன இரும்பால் ஆன இயந்திரமா? மனித இனம் அழிவை சந்தித்து தான் ஆக வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இயற்கைக்கும் செயற்கைக்குமான இந்த "நீயா நானா?" போராட்டத்தில் மனிதனின் பங்கு என்ன தெரியுமா? ஆமை வேகத்தில் வரும் அழிவை முயல் வேகத்தில் தன்னிடம் கொண்டு வருவது தான்.
செயற்கை நல்லது தான். ஆனால் இயற்கையை சாராத செயற்கை அழிவைத் தான் தரும். இந்த போராட்டத்தில் நீங்கள் முடிவு செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் என்னவாக இருக்க போகிறீர்கள் என்பது தான். "இயற்கையை அழிக்கும் செயற்கையை விரும்பும் இயந்திர மனிதனாகவா? இல்லை இயற்கையைச் சார்ந்த செயற்கையை விரும்பும் இனிய மனமுடைய மனிதனாகவா?" என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.
நான் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நல்ல செல்வாக்கோடு வாழ்கிறேன். நான் ஏன் இதைப் பற்றி கவலைப் பட வேண்டும்? அதற்கு தான் அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் இருக்கிறதே என்று நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் இருக்க முடியாது. அரசாங்கங்களும் தொண்டு நிறுவனங்களும் இருந்து கொண்டு தான் இருக்கும். பெரிய பெரிய மாநாடுகள் நடத்தப்படும். பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். ஆனால் எவையும் பின்பற்ற படமாட்டாது. அவை யாவும் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும்.
இதில் பிறரை எதிர்பார்ப்பது இரவில் சூரியனைத் தேடுவதற்கு சமம். ஒவ்வொரு மனிதனும் இதனை உணர்ந்து செயல்படாத வரை நாம் வேகமான அழிவை நோக்கி தான் சென்று கொண்டு இருப்போம். இப்பொழுதே முடிவு செய்யுங்கள். இந்த நீயா நானா போராட்டத்தில் "நீங்கள் இயற்கையின் பக்கமா? செயற்கையின் பக்கமா?"

Sunday, July 1, 2012

மனித இனத்தில் ஏலியன்ஸ்?

தலைப்புக்குள்ள போகறதுக்கு முன்னாடி ஒரு குட்டிக் கதைங்க.
ஒரு ஊருல ஒரு குரு இருந்தாரு. குருனு ஒருத்தர் இருந்த சிஷ்யனு ஒருத்தர் இருக்கனுமுல. அவரோட சிஷ்யன் பேரு அவசரக் குடுக்கன். ஆமாங்க, ஒரு தடவ அவன் குரு அவன்கிட்ட கயிறு ஒன்னு எடுத்துக்கிட்டு வர சொன்னாரு. தடதடனு ஒடுனவன் கயிறு எடுத்துக்கிட்டு வந்தான். மூச்சி வாங்க நின்னவன பாத்து குரு சொன்னாரு 'நீ ரொம்ப தைரியசாலினு'. ஒன்னும் புரியாம திருதிருனு மூழிச்சவன் கையப் பார்த்து தொப்புனு மயங்கி விழுந்தான். அவன் எடுத்துக்கிட்டு வந்தது கயிறு இல்ல பாம்புங்க. பாம்போட வால பாத்து நம்ம அவரசக்குடுக்கன் கயிறுனு முடிவு பன்னிட்டான். அப்படி எதையுமே முழுசா தெரிந்துக் கொள்ளாம பாதியிலேயே முடிவு பண்ற ஆளா இருந்திங்கனா " தயவு செஞ்சி இதை படிக்காதீங்க". அப்படியே படிச்சா முழுசா படிச்சிட்டு முடிவு பண்ணுங்க.
மனிதர்கள் கூழங்கற்களைப் போன்றவர்கள். பார்ப்பதற்கு ஒன்றுப் போன்று தோன்றினாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவரவருக்கே உரியக் குணங்கள் இருப்பினும் அனைவரும் இரு கண்கள் இரு கைகள் இரு கால்கள் இரு காதுகள் வம்பை விலைப்பேசும் வாய் உடைய "மனிதன்" என்றே வகுக்கப்படுகின்றனர். மிருகங்கள் பொதுவாக தங்கள் இனத்திற்குள்ளேயே சிறுசிறு கூட்டமாக பிரிந்து அக்கூட்டத்திற்கு ஒரு தலைவனும், அவர்களுக்குக்கென தனித்தனி எல்லையும் பிரித்துக் கொள்ளும். மனிதன் அறிவியல் அறிந்த நாகரிக மிருகம். இந்த மிருகம் மட்டும் என்ன விதிவிலக்கா?. நிறம், மொழி, மதம், சாதி, சமயம், நாடு என்று பலவகையில் பிரிந்தும் எல்லை வகுத்துக் கொண்டு இருப்பதும் நன்கு அறிந்ததே. ஆனால் மனிதர்கள் வேற்று கிரக வாசிகளுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதை பற்றி எவரும் பேசுவது கூட இல்லை. ஆனால் கடந்த இருவாரங்களிள் இதைப் பற்றி சில செய்திகள் வெளிவந்தன. ஒன்று "சத்தியமவே ஜெயதே" நிகழ்ச்சி நடத்தும் அமீர் கான் மூலமாக வந்தது. அதில் வந்த மாற்றுகிரக வாசிகள் மனிதநேயத்தை கேள்விக் குறியாக்கும் வாதங்களைக் கோரிக்கைகளாய் வைத்தனர். அதில் கலந்து கொண்டவர்கள் சிலர் கையைக் குத்தும் வரை அது கத்தி என்று அறியமாட்டார்கள். இடையே திருடன் கத்தியைக் காட்டி மறித்தாலும் நம்மைப் போன்று பார்த்த உடனே பயப்பட மாட்டார்கள். அவனே திருடன் என்று சொன்னால் தான் திருட்டை உணருவர். வண்ணங்களின் வேற்றுமையைக் கூட அறியாதவர்கள் அவர்கள். தீயதை அவர்கள் பார்ப்பதே இல்லை. அவர்கள் நிச்சயம் இதைப் படித்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். இயற்கையின் அழகை இரசிக்க இயற்கை இவர்களுக்கு கண்களை மறுத்துவிட்டது.
அவருள் சிலர் தீயதைக் கேட்பதே இல்லை. கடுஞ்சொற்கள் அவர்களை எளிதில் தொட்டுவிட முடியாது. இயற்கையின் இன்னிசையில் நனைய இவர்களுக்கு இயற்கை செவிகளை இசைக்கவில்லை. மேலும் சிலர் பொய்யே பிழைப்பாய் கொண்டு இருக்கும் பலருக்கு இடையே, இவர்கள் தீயதைப் பேசுவதே இல்லை. மொழியின் பெயரில் அடித்துக் கொள்பவர்கள் மத்தியில், இவர்கள் மொழியைப் பொருட்படுத்துவது இல்லை. இவர்களுக்கு ஒரே மொழி அமைதி. இயற்கை இவர்களை என்றும் அமைதியாக இருக்க வேண்டி பேச அனுமதிக்கவில்லை. இன்னும் சிலருக்கு அவரசம் நிறைந்த இவ்வுலகில் அவரப்பட்டு ஓடி விடக் கூடாதென்று அவர்களின் கால்களை கட்டிவிட்டது. சிலருக்கு அடுத்தவரை சுட்டி குறை கூறவோ இழிவு பேசவோ "நீ யாரடா ?" என்று கைளை அடக்கிவிட்டது. குழந்தைப் பருவத்தை நினைத்து அனைவரும் ஏங்க, குழந்தையாகவே இரு என்று சிலரின் மனவளத்தை இயற்கை நிறுத்திவிட்டது. இன்னும் சிலருக்கு இயற்கை இரண்டு மூன்று அம்சங்களை சேர்த்து அளித்துவிட்டது. இவர்களை உலகம் நேற்று வரை "ஊனமுற்றோர்" என்று அழைத்தது. அப்படி அழைப்பது அவர்கள் உள்ளத்தில் முள் குத்துவதாக கருதினர். இனி இவர்களை இப்படி அழைப்பதில்லை என்று முடிவு செய்து "மாற்றுத் திறனாளிகள்" என்று தான் அழைக்க வேண்டும் என்றனர். மாற்றுத் திறனாளிகள் என்று அழைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து அவர்களைப் பிரித்து ஒதுக்கும் போது அப்படி அழைப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? அவர்களும் நம்மைப் போன்று விளையாடுவது படிப்பது போன்று அனைத்தும் செய்யக் கூடியவர்கள். சாதனை செய்ய வல்லவர்கள். உருப்புகளில் குறை ஏற்பட்டுவிட்டது என்பதால் அவர்கள் மனிதர்கள் இல்லை என்றாகிவிடுமா? இவர்களுக்கு இயற்கை உடலில் மட்டும் தான் குறையைத் தந்தது. ஆனால் நாம் அவர்களின் உள்ளத்தை நாள்தோறும் கால்பந்தாடிக் கொண்டு இருக்கிறோம். அவர்களும் இயல்பான மனிதர்கள் தான். சாதாரண மனிதர்கள் போன்று இவர்களும் அனைத்தும் செய்ய வல்லவர்கள் தான். இவர்களைப் பார்த்து "உன்னால் பள்ளி சென்று பயில முடியாது", "இயல்பாய் இருக்க முடியாது","உன்னால் எதுவும் முடியாது" என்று தரம் தாழ்த்தி நீ ஒரு மாற்றுத்திறனாளி என்று ஒதுக்குவது எந்த விதத்தில் சரி? சிறியவர் முதல் பெரியவர் வரை இவர்களைப் பார்த்துக் குறையைச் சுட்டி கேலியும் கிண்டலும் செய்கின்றனர். சிலசமயம் இவர்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படுகிறது. சில பள்ளிகள் சில நிறுவனங்கள் இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறையைக் காட்டி அவர்களை அனாதையாக தவிக்க விடும் அவலங்களும் நடக்கின்றது. சமூகம் இவர்களை தனிமைப்படுத்தி, ஒடுக்கி, இழிவானப் பார்வையோடு வேறுபடுத்தி, வேற்றுகிரக வாசிகளாகவே நடத்தி வருகின்றது. இவர்களைப் போன்றே தனிமைப் படுத்தப் பட்டவர்கள் பற்றியது தான் மற்றொரு செய்தி.
இரண்டாவது செய்தி சொத்துரிமைப் பற்றியது. இந்தியாவில் சொத்துரிமைப் பற்றிய போரட்டங்கள் என்றுதான் ஓயுமோ. பெண் குழந்தைகள் கேட்டார்கள், மனைவிகள் கேட்டார்கள். என்றுதான் அனைவருக்கும் பொதுவான நியாமான சொத்துரிமைச் சட்டம் இயற்றப்படுமோ! சரி இந்தப் போராட்டம் திருநங்கைகள் சொத்துரிமைக் கேட்டுப் போராடியது. அவர்களுக்கு உரிமைகள் தொடக்கம் முதலே மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களை இழிவுப் பொருளாகப் பார்க்கும் மடத்தனம் அனைவரிடமும் இருக்கின்றது. சிறு குழந்தைக் கூட இவர்களை சுட்டிக் காண்பித்து பிறரை திட்டுகின்றது. அதைவிட கொடுமையாய் அவர்கள் தாசி தொழில் மட்டும் செய்பவர்கள் என்று சினிமாக்களில் சித்தரிக்கப் படுகின்றனர். வேறு வேலைகளை அவர்கள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. பெற்றோர்கள் இவர்களை குப்பையாக கருதி தூக்கி வீசுகின்றனர். பள்ளிகளும் வேலை நிறுவனங்களும் இவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. பொதுவாக திருநங்கைகளும் உடல் உருப்பில் குறை இருப்பவர்களும் சந்திக்கும் பிரச்சனை அவர்கள் நிராகரிக்கப் படுகின்றனர். அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வேற்றுகிரக வாசிகள் போன்று நடத்தப் படுகின்றனர். அவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என்ற பார்வை அவர்கள் மீது திணிக்கப் படுகின்றது. பல சமயங்களில் கல்விக் கற்பது போன்ற அடிப்படை உரிமைக் கூட மறுக்கப் படுகின்றது. அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மனிதத்தைக் கேள்விக் குறி ஆக்குகின்றன. மறுபிறவிப் பற்றிய நம்பிக்கை உடைய மதத்தினர் அவர்களை சென்றப் பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று கருதுகிறார்கள். அவர்களைத் தொடுவதோ அவர்களிடம் பேசுவதோ பாவச் செயலாக நினைத்து ஒதுக்குகின்றனர். மேலும் சிலர் அவர்களுக்கு உணவளிப்பதை புன்னியம் பெறும் செயலாக கருதுகின்றனர். அவர்களை யாசிக்கும் பிச்சைக்காரர்களாக பார்க்கின்றனர். உடல் குறைப்பாடு உடையவர்கள் மனதை தாழ்த்தி அவர்களை கையேந்த தூண்டுகின்றனர். அவர்கள் புறக்கணிக்கப் படும் போது மனம் புண்பட்டு அவர்கள் கையேந்த நிர்பந்திக்கப் படுகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் கடவுளின் குழந்தைகளாக பார்க்கின்றனர். திருநங்கைகளுக்கும் இதே நிலை தான். இவ்விருவர்களையும் மனிதர்களாகப் மதிப்பது இல்லை. ஒரு கேலிப் பொருளாகவே பார்க்கின்றனர். தலையில் வழுக்கை விழுவதும் ஒரு குறைதான். அதனால் அவர்களை ஒதுக்கி விடுவீர்களா? சிலர் அவர்கள் உயிர்களை துட்சமாக பார்க்கின்றனர். உடல் உருப்பில் குறை உடையவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இழைக்கப் படும் கொடுமைகள் மிகப் பெறும் மனிதநேயக் கொடுமைகள். மிருகங்கள் வதைக்கப் படுவதை எதிர்த்து பல தலைவர்களும் அமைப்புகளும் குரல் எழுப்புகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றி குரல் மிக அரிதாகவே எழுப்ப படுகிறது. அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. இவர்களும் இயற்கையின் படைப்புகள் தான். அவர்கள் பாவப்பட்டவர்களோ யாசிக்க பிறந்தவர்களோ பொழுது போக்கு அம்சங்களோ வாழத் தகுதி அற்றவர்களோ அல்ல. நம்மைப் போன்ற இயல்பான மனிதர்கள் தான். வேறுபட்ட வேற்றுகிரக வாசிகள் இல்லர். அப்படி அவர்களை நடத்துவதையும் நிறுத்த வேண்டும். அவர்களுக்கும் ஆசை, பாசம், மனித உணர்வுகள் உள்ளன. அவர்களுக்கு வேண்டியது நம் கரிசனமோ கருணையோ அல்ல நம்முடைய அன்பு தான். அது தான் அவர்களுக்கு நம்பிக்கை தரும். அதுதான் மனிதனுக்கு வாழ்வதற்கான சக்தி. நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் அளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தனி இலாக்க மற்றும் வசதிகள் போன்ற சிறப்பு உரிமைகளையும் கவனமும் அரசாங்கம் அளிக்க வேண்டும். அடுத்து அவர்களை பார்க்கும் போது நகையோ பாவப் பட்டவர்கள் என்றோ தோன்றக் கூடாது. மனத்தில் சிறு சலனம் கூட ஏற்படக் கூடாது. அவர்களுடன் இயல்பாய் பழக வேண்டும். அதுவே "நாம் மனிதன்" என்பதற்கான முழு அடையாளம். மாற்றம் நன்மைக்கே. நன்றி குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. யாரும் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதற்கே.

Tuesday, June 26, 2012

தந்தை

என்னை நெகிழ வைத்த அந்தக் காட்சி அரங்கேறியது காரைக்குடியில் ஒரு பிரபல அசைவ பிரியாணி உணவகத்தில். சற்று விலையுயர்ந்ததும ் கூட. அது ஞாயிறு மதியம். நானும் என் நண்பர்கள் சிலரும் அங்கே சென்றிருந்தோம். எங்களுக்கு உணவு வந்தது. பிரியாணியை ஒருபிடி பிடித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அங்கே ஒருவர் அழுக்குப் படிந்த பனியன், தோளில் ஒரு துண்டுடன் தன் ஆறு ஏழு வயது இருக்கும் மகனை அழைத்து வந்தார். அந்த மகனின் ஆடை அவரைப் போன்று இல்லாமல் நன்றாகவே இருந்தது. இருவரும் அமர்ந்தனர். அங்கு பணி செய்பவர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அத்தந்தை ஒரே ஒரு சிக்கன் பிரியாணி மட்டும் கொண்டு வரச் சொன்னார். அவரின் தோற்றத்திற்கு அந்த65 ரூபாய் பிரியாணி மிகவும் ஆடம்பரமான ஒன்று. பிரியாணி வந்தது. தன் மகனிடம் கொடுத்து உண்ணச் செய்தார்.தான் உண்ணாமல் பட்டினிக் கிடந்து தன் மகனை உண்ண வைத்தார். அவன்உண்பதை பார்த்து ரசித்தார். அந்நேரம்"அம்மா" வின் அருளால் மின் விசிறி நின்றது. வியர்வை எங்களைக் குளிப்பாட்டியது . ஜெனரட்டரை இயக்க சற்று தாமதம் ஆனது. அத்தந்தை அங்கு இருந்த மெனு கார்டை எடுத்து தன் மகனுக்கு விசிறினார். அந்தக் காட்சியைக் கண்டு என் நெஞ்சம் நெகிழ்ந்தது. அத்தந்தை ஏழையாக இருக்கலாம். ஆனால் அவரின் பாசம் வான் உயர்ந்தது.